Friday, August 12, 2011

பணம் சேமிக்கும் வழிகள்

1.      ஒவ்வொரு மாதமும், உங்கள் வரவு மற்றும் செலவுகளை திட்டமிட்டு செய்யுங்கள்.
2.      ஒவ்வொரு பொருளையும் வாங்குவதற்க்கு முன்பு, அது உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை ஆராய்வது மிகவும் அவசியும். நீங்கள் வாங்கும் பொருள் ஆடம்பரத்திற்க்காக இருந்தால், அதை வாங்குவதை தவிர்க்கவும்.
3.      ஒவ்வொரு பொருளையும் பேரம் பேசி வாங்குகள்.  விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முன்பு அதன் விலையை 2 அல்லது 3 கடைகளில் பேரம் பேசி வாங்குவது நல்லது.
4.      உணவு விடுதிகளில் சாப்பிடுவதை தவிர்க்கவும். அது உங்கள் பணத்தை கரைப்பது மட்டுமில்லாமல், உங்கள் உடலுக்கு பல உபாதைகளை விளைவிக்கும்.
5.      வங்கிகளில் கடன் வாங்குவதை முடிந்தவரை தவிர்க்கவும். கடன் ஆரம்பத்தில் உங்களது தேவைகளை புர்த்தி செய்தாலும், அது போக போக உங்களுக்கு வட்டி என்ற நீண்ட கால சுமையை தரும்.
6.      நீங்கள் உபயோகிக்கும் பொருள் பழுதடைந்து விட்டால், புதிய பொருளை வாங்குவதற்க்கு பதிலாக, அதே பழைய பொருளை பழுது பார்த்து உபயோகிக்கலாம்.
7.      நீங்கள் குடி பழக்கம் உள்ளவரா அல்லது புகை பிடிப்பவராக இருந்தால், குடி மற்றும் புகை பழக்கத்தை குறைத்துக்கொள்வது அல்லது முற்றிலுமாக நிறுத்திக்கொள்வது நல்லது.
8.      இரவு நேரங்களில் உங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகளை தேவைபட்டால் மட்டும் உபயோகிக்கலாம். உதாரணமாக யாரும் இல்லாத அறைகளில் எரியும் விளக்குகளை அணைப்பது வீட்டிற்க்கும்/நாட்டிற்க்கும் நல்லது.
9.      குண்டு மின்சார விளக்குகளுக்கு பதிலாக U–வடிவ CFL (Compact Fluorescent Light) மின்சார விளக்குகளை உபயோகிகளாம். இவைகள் 40%-லிருந்து  60%-வரை மின்சாரத்தை சேமிக்கும்.
10.  சத்துள்ள உணவுகளை மூன்று வேலைக்கு சாப்பிட்டு, காலையிலும், மாலையிலும் உடற்பயிர்ச்சி செய்துவந்தால் உங்களுக்கு எந்தவித நோயும் அண்டாது. இது மருத்துவத்துக்காக செலவு செய்யும் பணத்தை மிச்சப்படுத்தும்.
11.  உங்கள் வீட்டு மளிகை சாமான்களை மாதத்திற்க்கு ஒரு முறை வாங்கி வைப்பது நல்லது. நீங்கள் மளிகை சாமான்களை Wholesale கடைகளில் வாங்குவது உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும். இருந்தபோதிலும் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளும் தரமாக இருக்கிறதா என்பதை ஆய்ந்து வாங்குவது நல்லது.
12.  சில மளிகை சாமான்கள் சில Offer-டன் வரும். அது போன்ற சாமான்களின் தரத்தை ஆராய்ந்து வாங்குவது நல்லது.
13.  நீங்கள் தொலைபேசிகளை உபயோகத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் தொலைபேசியில் ஒவ்வொரு முறை பேசுவதற்க்கு முன்பு, நீங்கள் அடுத்தவருக்கு என்ன தெரியபடுத்த விறும்பிகிறீர்கள் அல்லது நீங்கள் என்ன அவர்களிடமிருந்து தெரிந்துகொள்ள விறும்பிகிறீர்கள் என்பதை அராய்ந்து அதன்பின் பேசுவது நல்லது.
14.  Post-paid-ஐ விட Pre-paid plan சிறந்தது. ஏனென்றால், PrePaid-ல் நீங்கள் உங்களது தொலைபேசி இறுப்பு தொகையை ஒவ்வொரு முறை பேசி முடித்தவுடன் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இது உங்கள் பேசும் நேரத்தை கட்டுபாட்டில் வைத்திருக்கும்.
15.  நீங்கள் செல்லும் இடம் நடந்து செல்லும் தூரத்தில் இருந்தால் வாகனத்தை பயன்படுத்தாமல் நடந்து செல்வது உங்கள் பணத்தை சேமிப்பது மட்டுமில்லாமல் உங்களது உடலுக்கு ஒரு நல்ல உடற்பயிர்ச்சியாக இருக்கும்.
16.  நீங்கள் தனியாக ஒரு இடத்திற்க்கு சில வேலை காரணமாக செல்வதாக இருந்தால் 2 சக்கர வாகனத்தை பயன்படுத்தலாம். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் செல்வதாக இருந்தால் 4 சக்கர வாகனத்தை பயன்படுத்தலாம்.
17.  உங்கள் வீட்டு மின்சாரம் மற்றும் தண்ணி கட்டனங்களை கடைசி தேதிக்குள் கட்டுவது நல்லது. மேலும் அவைகளை online-ல் கட்டுவது உங்கள் வாகன எரி பொருளை சேமிக்கும்.
18.  உங்கள் வீட்டில் பயன்படுத்த படாத பழைய பொருட்களை விற்று, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து நல்ல உபயோகமான பொருட்களை வாங்களாம்.
19.  நிறைய துணிகள் மிக குறைந்த விலையில் நல்ல தரத்துடன் கிடைக்கும் போது, நீங்கள் ஏன் Branded துணிகளை வாங்க வேண்டும்? எதுக்கெடுத்தாலும் Branded துணிகளையே வாங்காதிர்கள்.
20.  உணவை ஒருபோதும் வீணாக்காதிர்கள். இது உங்களுக்கு நல்ல சேமிப்பை ஈட்டி தருவது மட்டுமில்லாமல், வீணாக்கபடாத அந்த உணவு ஏழை மக்களுக்கு மறைமுகமாக போய் சேரும் புன்னியத்தை அடைவீர்கள்.

1 comment:

  1. it is very nice and very useful for the students school projects.

    ReplyDelete